'செத்த எலி கதை'. ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். கோத்தாப்பாரு ஐஸேயாப் பெரியவர் சொல்லிக்கொள்வது மாதிரி பரமஏழை இல்லை. உண்மையிலேயே பரமஏழைதான். அந்த ஊரிலேயே ஒரு பெரும் பணக்காரனும் இருந்தான். இளைஞனுக்கு ஒரு பேரவா. அந்தப் பணக்காரனிடம் சென்று அவனுடைய செல்வத்தின் உத்தியைத் தெரிந்து கொண்டுவரவேண்டும். ஆகவே அவன் வீட்டுக்குச் சென்றான். அப்போது அந்த செல்வந்தன் நல்ல மூடில் இல்லை. அவனுடைய தானியக் கிடங்கில் எலிகள் தொல்லை. எலியை அடிக்க ஆட்களை ஏவிவிட்டதில் ஒரே ஒரு எலிமட்டும்தான் அடிபட்டது. அதையும் அவனிடம் காட்டிவிட்டு வெளியில் போட்டுவைத்தார்கள். "என்ன விஷயம்?" "ஒன்றுமில்லை, ஐயா. நீங்கள் செல்வந்தராகிய உத்தியை எனக்குச் சொல்லித்தரவேண்டும்" "அதெல்லாம் சொல்லியன்றும் தரவேண்டியதில்லை. இங்கே என்ன ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூலா வைத்து நடத்திக்கொண்டிருக்கிறேன்? அதெல்லாம் அததுவாக வரவேண்டியது. எல்லாம் புத்தி சாதுர்யம்தான். இதோ பார். புத்தி சாதுர்யம் மட்டும் இருந்தால், அதோ கிடக்கிறதே, செத்த எலி.......அதை வைத்தே பெரும் பணக்காரனாகி விடலாம்," என்றான். இளைஞனுக்கு ஏதோ பொறி தட்டியத...